• ஐஸ்வர்யா தனுஷின் அடுத்த பட கதாநாயகன்!



    தனுஷின் ”3” படத்தையடுத்து ஐஸ்வர்யா தனுஷ் புதிய படமொன்றை இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார். இப்படம் முழுக்க முழுக்க கலகலப்பான காதல் நகைச்சுவைப் படமாக அமையும் எனத் தெரிகிறது.


    ஏற்கனவே, அறிவித்தப் படி தனுஷை வைத்து இயக்காமல், வேறு ஒரு ஹீரோவை வைத்து இயக்க முடிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. இதனால் ஹீரோவை தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளார். ஐஸ்வர்யாவின் “3” படத்தில் தனுஷிற்கு நண்பனாக நடித்த சிவகார்த்திகேயன், புதிய படத்தில் ஹீரோவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளன. ஆனால் ஹீரோயின் மற்ற நடிகர்கள் குறித்த விஷயங்கள் இன்னும் அறிவிக்கவில்லை.

    இது பற்றி ஐஸ்வர்யா கூறும்போது, “எனது அடுத்த படத்தை எடுக்க நான் காத்திருக்க விரும்பவில்லை. சும்மாவே உட்கார்ந்திருக்க எனக்குப் பிடிக்கவில்லை. பணியாற்றுவது எனக்குப் பிடித்துள்ளது. என் தாயாரும் மாமியாரும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால், இயக்குநராகப் பணியாற்றுவது சுலபமாக உள்ளது” என்றார்.

0 comments:

Post a Comment