கவர்ச்சி நடிகை நமீதாவுடன் ரொமன்ஸ் செய்கிறார் காமெடி நடிகர் விவேக்.
நமீதா நீண்ட நாட்களுக்கு இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் 'மச்சான்' என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இப்படம் ஒரு முழுநீள நகைச்சுவை படமாக உருவாகி வருகிறது.
இதில் மாபெரும் நகைச்சுவை மன்னர்களான விவேக் மற்றும் கருணாஸ் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தில் விவேக் உடன் இணைந்து நமீதா நகைச்சுவை கலந்த காதல் கட்சிகளில் கலக்கியுள்ளார். இதேபோல் நடிகை செரில் பின்டோ கருணாஸுடன் இணைந்து காமெடியில் அசத்தியுள்ளார். முதன் முறையாக நமீதா விவேக்குடன் இணைந்து காதல் காட்சிகளுடன் காமெடி காட்சிகளிலும் நடிக்கிறார். மொத்தத்தில் இந்த படம் நமீதா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

0 comments: