• இந்தியாவின் செல்வாக்கு உள்ள மனிதர்களின் டாப் 50 பட்டியலில் ரஜினிகாந்த்



    ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் செல்வாக்கும் உயர்மதிப்பும் கொண்ட மிக முக்கியமான மனிதர்களை பட்டியலிடுவது இந்தியா டுடே பத்திரிகையின் வழக்கம்.
    இந்த ஆண்டும் அப்படியொரு பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இந்த பட்டியலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இடம்பெற்றுள்ளார்.


    இத்தனைக்கும் கடந்த இரு ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் ஏதும் வெளிவரவில்லை. உடல்நலக் குறைவு, 'ராணா' தள்ளிப்போனது என பிரச்சினைகள் இருந்தாலும் மக்கள் செல்வாக்கு, ரசிகர்களின் அபிமானம், வரவிருக்கும் 'கோச்சடையான்' மீதான எதிர்ப்பார்ப்பு போன்றவற்றால், அவரே செய்திகளின் நாயகனாகத் திகழ்கிறார்.

    இந்தியா டுடே கடந்த வாரம் வெளியிட்டுள்ள அந்த டாப்- 50 பட்டியலில், அன்னா ஹசாரே, ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, அமிதாப் பச்சன், ஏ.ஆர். ரஹ்மான், யுவ்நாடார், சச்சின் டெண்டுல்கர், அஜீம் பிரேம்ஜி என பல பிரபலங்கள் இடம் பிடித்திருகிறார்கள்.

    'தென்னாட்டு சுல்தான்' என்ற தலைப்பில், ரஜினியின் செல்வாக்கு நிலைக்கான எட்டு காரணங்களை இந்தியா டுடே பட்டியல் இட்டு இருக்கிறது. அந்த காரணங்கள் இவைதான்...
    61 வயது கொண்ட ரஜினிகாந்த் ஒரு தென்னாட்டு சுல்தான்!

    1. சல்மான்கான் போன்ற சூப்பர் ஸ்டாருக்கு பாலிவுட் பட்டம் சூட்ட எண்ணியபோது, அவர்கள் தந்த பெயர் 'ரஜினிகாந்த்'

    2. நோயுற்று மே 2011-ம் திகதி சிங்கப்பூர் மருத்துவமனையில் அவர் இருந்தபோது, தமிழகத்தின் இதயத் துடிப்பு நின்றுபோனது போலிருந்தது.

    3. 'கோச்சடையான்' எனும் இந்தியாவின் முதலாவது தொழில்நுட்ப மோசன் கேப்சரிங் சினிமாவில் நடிக்கிறார்.

    4. இவரது வயது ஏறிக்கொண்டிருக்க, இவரது கதாநாயகிகளின் வயது குறைந்துகொண்டே பேகிறது. கோச்சடையானில் இவரது கதாநாயகி தீபிகா படுகோனின் வயது இருபத்து ஆறுதான்.

    5. எந்திரனின் வெற்றி, சூப்பர் ஸ்டாரைப் பற்றிய புதிய ஐபாட் மென்பொருளை அறிமுகப்படுத்த ஆப்பிளுக்கு உணர்த்தியது.

    6. 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு வந்து கோச்சடையானுக்காகப் பாடினார்.

    7. ரஜினியின் அதிகாரப்பூர்வ வாழ்க்கை வரலாறு அவரது 62-வது பிறந்த நாளான 12.12.12 அன்று வெளியிடப்படும்.

    8. கோச்சடையானின் தெலுங்கி தியேட்டர் உரிமை ரூ 30 கோடிக்கு விற்பனையானது.

    இத்தனை அம்சங்களையும் கொண்ட ஒரு மனிதன் தமிழ்நாட்டில் இருக்கின்றான் என்றால் அது நிச்சயம் சூப்பர் ஸ்டாராகத்தான் இருக்க முடியும்.

0 comments:

Post a Comment