• மகிழ்ச்சியில் திக்கு முக்காடியுள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படக் குழுவினர்



    கடந்த வெள்ளிக்கிழமை அன்று 'ஒரு கல் ஒரு கண்ணாடி' திரைப்படம் வெளியானது.
    இந்தத் திரைப்படம் தயாரிப்பாளர்களின் எதிர்பார்ப்பையும் மீறி ஓடிக்கொண்டிருப்பதில் உதயநிதி வட்டாரம் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளது.

    அஜித், விஜய், சூர்யா படங்களுக்கு இருக்கும் ஓபனிங் இந்தப் படத்திற்கு இருக்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.


    ஆனால் அதையும் தாண்டி ரஜினி படத்திற்கு இருக்கும் ஓபனிங் இருப்பதை கண்டு 'ஓகே ஓகே' யூனிட்டே சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறது.

    அந்த அளவுக்கு இந்தப் படம் அனைவரையும் கவர்ந்திருக்கிறது. ஏ, பி, சி ஆகிய அனைத்து சென்டர்களையும் இப்படம் தன்வசம் இழுத்துள்ளது.

    போட்ட பணம் வந்தாலே போதும் என்று இருந்தவர்களுக்கு இந்தத் திரைப்படம் பன்மடங்கு லாபத்தை கொடுக்கும் என்பது தெரிய வந்ததால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ளனர்.

0 comments:

Post a Comment