சிங்கம் படத்தின் மெகா வெற்றிக்குப் பிறகு சூர்யா- ஹரி கூட்டணி நான்காவது முறையாக இணையும் படம் "சிங்கம்-2".
ஆறு, வேல், சிங்கம் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு அழகான கதையம்சம் கொண்ட படத்தில் சூர்யா நடிக்கின்றார்.
இப்படத்தில் சூர்யா-வுடன் அனுஷ்கா மற்றும் ஹன்சிகா ஆகிய இரு கதாநாயகிகள் இணைந்து நடிக்கிறார்கள்.
மேலும் சிங்கம் படத்தில் நடித்த விவேக், விஜயகுமார், ராதாரவி, நாசர், ஆகியோருடன் ரகுமான் மற்றும் பல புதிய கதாபாத்திரங்கள் இணையவுள்ளனர்.
இவர்களுடன் சந்தானம் நைகச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சென்னை, ஹைதராபாத், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் காரைக்குடி ஆகிய இடங்களில், இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளது.
இயக்குனர் ஹரி முதன் முறையாக படத்தின் சில முக்கிய காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் பாடல்கள் ஆகியவறை தென் ஆப்ரிக்கா, கென்யா போன்ற ஆப்ரிக்க நாடுகளில் படமாக்குகிறார்.
சிங்கம் படத்திற்கு இசையமைத்த தேவி ஸ்ரீ பிரசாத் மீண்டும் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு- பிரியன், படத்தொகுப்பு- V.T.விஜயன், கைல- K.கதிர், பாடல்கள்- நா.முத்துக்குமார், விவேகா, மதன் கார்கி. நடனம்- பிருந்தா, பாபா பாஸ்கர்.
தயாரிப்பு மேற்பார்வை- சந்தானம், தயாரிப்பு நிர்வாகம் - சின்ன ராஜேந்தர், பத்திரிகை தொடர்பு - ஜான்சன். கைத, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் - ஹரி. பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் லக்ஷ்மணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

0 comments: