கொலிவுட் இளம் புயல் ஜெயம் ரவி நடிக்கும் புதிய படத்தில் நாயகி அமலாபால் நடிக்க உள்ளார்.
கொலிவுட்டில் “போராளி” படத்தினை அடுத்து சமுத்திரக்கனி இயக்கும் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கவுள்ளார்.
இப்படத்தினை “நான் கடவுள்”, “பாஸ் (எ) பாஸ்கரன்” ஆகிய படங்களைத் தயாரித்த வாசன் விஷுவல்ஸ் தயாரிக்கவுள்ளது.
இப்படத்தில் நாயகியாக நடிக்க படக்குழுவினர் அமலாவை அணுகி இருக்கிறார்கள். அமலாவும் கதையை கேட்டு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் வெளிவர இருக்கிறது.
இப்படத்தில் நடிக்க அமலாவிற்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் ரூ.80 லட்சம் ஆகும்.
ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் வெளியாகும் இந்த பெரிய பட்ஜெட்டில் படத்தில் ஒப்பந்தமானதால் அமலா சந்தோஷத்தில் இருப்பதாக கொலிவுட் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

0 comments: