• பொலிஸ் வேடத்தில் நாயகி ரீமாசென்



    கொலிவுட் நட்சத்திர நாயகன் இளையதளபதி விஜய் தயாரிக்க இருக்கும் 'சட்டம் ஒரு இருட்டறை' ரீமேக் படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிக்க ரீமா சென் ஒப்பந்தமாகியுள்ளார்.
    எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1981ம் ஆண்டு 'சட்டம் ஒரு இருட்டறை' திரைப்படம் வெளிவந்தது.


    தமிழில் வரவேற்பை பெற்றதையடுத்து பல்வேறு மொழிகளில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

    இந்தியில் ரஜினிகாந்த் நடிக்க 'அந்தாகானூன்' என்ற பெயரில் வெளியாகி, ரஜினிக்கு அங்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

    இந்நிலையில் இளையதளபதி விஜய், தற்போது சட்டம் ஒரு இருட்டறை படத்தினை மீண்டும் தமிழில் தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

    இப்படத்தை விஜய்யின் உறவுக்காரப் பெண் சினேகா இயக்கவுள்ளார்.

    விஜயகாந்த் நடித்த பாத்திரத்தில் நடிக்க பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    இவருடன் பியா, கார்த்திகா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

    இதையடுத்து தற்போது பொலிஸ் வேடத்தில் நடிக்க நாயகி ரீமா சென் ஒப்பந்தமாகியுள்ளார்.

    பொலிஸ் வேடத்திற்கு தயாராகும் நாயகி ரீமா யோகா, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

0 comments:

Post a Comment