இந்தியாவின் முதல் 3டி டான்ஸ் படமான ஏபிசிடியில்(எனிபடி கேன் டான்ஸ்) நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படுபவர் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் பிரபுதேவா. அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும் கூட அவரது டான்ஸ் புகழுக்கு இதுவரை ஒரு குறைச்சலும் இல்லை. சிறப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது பிரபுதேவாவின் டான்ஸ் வாழ்க்கை.
இந்த நிலையில், அவர் இந்தியாவின் முதல் 3டி டான்ஸ் படமான ஏபிசிடியில்(எனிபடி கேன் டான்ஸ்) முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருடன் மேலும் சில நடன இயக்குனர்களும் நடிக்கின்றனர்.
பிரபுதேவா இதுவரை 100 படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார். தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் ரவுடி ரத்தோர், பூமிகாவின் களவாடிய பொழுதுகள் ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் ஏபிசிடி படம் குறித்து கூறுகையில்,
ஏபிசிடி தான் இந்தியாவின் முதல் 3டி டான்ஸ் படம். இந்த படத்தில் கதாநாயகியே இல்லை. நான் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இந்தியாவில் 3டி படம் எடுக்க நேரம் எடுக்கும். ஒவ்வொரு காட்சியையும் ஸ்பெஷலிஸ்டுகள் ஒப்புக் கொண்டால் மட்டுமே அடுத்த காட்சிக்கு போக முடியும். தேவைப்பட்டால் அதே காட்சியை மீண்டும் எடுக்க வேண்டி வரும். உதாரணமாக ஒரு பூச்சி செட்டுக்குள் வந்தால் கூட அது 3டி தொழில்நுட்பத்தில் பெரிதாகத் தெரியும் என்றார்.
இந்தியில் ரன்பீர் கபூர் ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறாரே நீங்கள் ஆடுவீர்களா என்று கேட்டதற்கு, ஒரு படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் ஒரு ஆண் ஆடினால் அது சிறப்புத் தோற்றம். அதுவே பெண் ஆடினால் அது ஐட்டம் டான்ஸ். அது போன்று ஒரு பாடலுக்கு ஆட நான் ரெடி என்றார்.
0 comments: