ஓகே.ஓகே. படத்தின் வெற்றிக்கு சந்தானமும், டைரக்டர் ராஜேஸூம்தான் காரணம் என்று உதயநிதி ஸ்டாலின் பெருந்தன்மையுடன் கூறியுள்ளார். தயாரிப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமாகி வெற்றி பெற்ற உதயநிதி, ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் கதாநாயகனாகவும் வெற்றி பெற்றிருக்கிறார்.
படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை தியேட்டரையே சிரிப்பலைக்குள் மூழ்க வைக்கும் ஓகே.ஓகே. வெற்றி குறித்து உதயநிதி அளித்துள்ள பேட்டியில், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தை மக்கள் ரொம்ப ரசித்துப் பார்க்கிறார்கள். சந்தானத்தின் பஞ்ச் டயலாக்குகளுக்கு அப்படியொரு வரவேற்பு. வெள்ளிக்கிழமை ஏ,பி,சி என எல்லா வகுப்பு ரசிகர்களுடனும் படம் பார்த்துவிட்டோம். எல்லோருமே படத்தை திகைக்க திகைக்க ரசிக்கிறார்கள்.
நான் நிஜமாவே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்ப்பார்க்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து நிறைய ரசிகர்கள் பேசுகிறார்கள். இந்தப் படத்தின் வெற்றிக்கான பங்கு இயக்குனர் ராஜேஷ் மற்றும் சந்தானத்தையே சேரும். ஹாரிஸ் ஜெயராஜ் அருமையான இசை தந்தார். பாடல்களுக்கு நல்ல வரவேற்பு. என்னையும் ஹீரோவாக ஏற்றுக் கொண்டதற்கு ரசிகர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து எனக்கு ஏற்ற கதை என்றால் நடிப்பேன். இல்லாவிட்டால் பொருத்தமான கதைக்கு காத்திருக்க முடிவு செய்துள்ளேன், என்று கூறியுள்ளார்.
0 comments: