புரட்சித்தளபதி விஷாலுடன் ஹன்சிகா இணைந்து நடிக்கும் புதியதொரு படத்தை சுந்தர்.சி இயக்க இருந்தார்.
இந்நிலையில் விஷாலின் உயரத்தை மனதில் வைத்து அப்படத்திலிருந்து ஹன்சிகாவை படக்குழு விலக்கியுள்ளார்கள்.
அவருக்கு பதிலாக கோ வெற்றிப்பட நாயகி கார்த்திகா விஷாலுடன் இணைகிறார்.
கார்த்திகா தற்போது அன்னக்கொடியும் கொடிவீரனும் என்ற படத்தில் பாரதிராஜா இயக்கத்தில் நடித்து வருகிறார்.
நாயகன் விஷால் தற்போது சமரன் படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் இருவருடைய திகதிகள் முடிந்த பின்னர், இப்படத்தை சுந்தர்.சி இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கும் மசாலா கபே படத்தைப்போல இப்படமும் நகைச்சுவைப் படமாக அமையும் கொலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

0 comments: