• தாண்டவத்தில் 3வது ஹீரோயினாக இணைந்த லட்சுமி ராய்…!


    தெய்வத்திருமகள் படத்தை தொடர்ந்து டைரக்டர் விஜய், மீண்டும் விக்ரமை வைத்து இயக்கி வரும் படம் தாண்டவம். இப்படத்தில் விக்ரமுடன் தெலுங்கு ஹீரோ ஜெகபதி பாபுவும் நடிக்கிறார். படத்தின் நாயகிகளாக அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் ஆகியோர் நடிக்கின்றனர். யு.டி.வி தயாரித்து வரும் இப்படத்தின் சூட்டிங் தற்போது லண்டனில் நடந்து வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் அனுஷ்கா, எமி ஜாக்சன் ஆகிய இரண்டு ஹீரோயின்கள் நடித்து வரும்நிலையில் இப்போது 3வது ஹீரோயினாக லட்சுமி ராயும் இணைந்துள்ளார். கடந்த ஆண்டு மங்காத்தா, காஞ்சனா என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த லட்சுமி ராய்க்கு நிறைய படங்கள் தேடி வருகிறது. இந்நிலையில் தாண்டவம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. தற்போது லண்டனில் முகாமிட்டு இருக்கும் தாண்டவம் படக்குழுவுடன் லட்சுமி ராயும் விரைவில் இணையவுள்ளார். ஜூன் மாதம் வரை லண்டனில் தாண்டவம் படம் சூட்டிங் நடக்கிறது. சூட்டிங் எல்லாம் முடிந்து ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் இப்படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

0 comments:

Post a Comment