நடிகை ஹன்சிகா நியூமராலஜி படி தனது பெயருக்கு பின்னால் உள்ள மோத்வானியை நீக்கியுள்ளார்.
தனுஷின் மாப்பிள்ளை மூலம் தமிழில் அறிமுகமானவர் நாயகி ஹன்சிகா மோத்வானி.
பின்னர் இளைய தளபதி விஜய்யுடன் வேலாயுதம், ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல் ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது ராஜேஷ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மேலும் தனக்கு வாய்ப்புகள் அதிகம் வரவேண்டும் என்று எண்ணி ஒரு புதிய மாற்றத்தை ஹன்சிகா செய்துள்ளார்.
பொதுவாக நடிகர், நடிகைகள் நியூமராலஜி படி தனது பெயரில் சில எழுத்துக்களை சேர்ப்பதும், நீக்குவதுமாக இருப்பார்கள்.
அதற்கு ஹன்சிகாவும் விதி விலக்கல்ல என்பது தற்போது வெளிவந்திருக்கும் தகவல் மூலம் நிரூபணமாகியுள்ளது.
நியூமரலாஜி படி தனது பெயருக்கு பின்னால் இருக்கும் மோத்வானியை, ஹன்சிகா நீக்கியுள்ளார். இனி நான் வெறும் ஹன்சிகா தான் என்றும் தெரிவி்த்துள்ளார்.

0 comments: