• தனுஷ், சிம்பு மீண்டும் மோதல்?



    தனுஷ், சிம்பு இடையே மீண்டும் பனிப்போர் துவங்கியுள்ளது. சில வருடங்களுக்கு முன் இருவரும் தங்கள் படங்களில் ஒருவரையொருவர் மறைமுகமாக தாக்கி வசனம் வைத்தனர். பொது நிகழ்ச்சிகளிலும் விமர்சித்து பேசினார்கள்.

    தனுசின் ‘சுள்ளான்’ படத்தில் நாயகியாக நடித்த சிந்து துலானியை சிம்பு தனது படத்தில் துணை நடிகையாக்கினார். சிம்புவுடன் காதல் தகராறில் இருந்த நயன்தாராவை தனுஷ் அழைத்து தனது ‘யாரடி நீ மோகினி’ படத்தில் நடிக்க வைத்தார்.
    சிம்பு புது ஸ்டைலில் ‘எவன்டி உன்ன பெத்தான்… கையில் கிடைச்சா செத்தான்…’ என்றும் ‘லூசுப் பெண்ணே…’ என்றும் பாடல்கள் பாடினார். அதே பாணியில் தனுசும் ‘அடிடா அவள… உதடா அவள…’ என்றும் ‘ஒய்திஸ் கொலை வெறி…’ என்றும் போட்டியாக பாடினார். பிறகு இருவரும் சமாதானம் ஆனார்கள். தங்களுக்குள் நல்ல நட்பு இருப்பதாகவும் அறிவித்தனர். ஒருவரையொருவர் பாராட்டியும் பேட்டி அளித்தனர்.
    இந்த நிலையில் தற்போது மீண்டும் தகராறு மூண்டுள்ளது. சிம்புவை நாயகனாக வைத்து ‘வட சென்னை’ என்ற படத்தை வெற்றி மாறன் இயக்க தயாரானார். கதை, விவாதம், தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்கு கிளம்பினர். ஆனால் திடீரென்று பட வேலைகள் நிறுத்தப்பட்டு விட்டன. அந்த படத்தை வெற்றிமாறன் கைவிட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    சிம்புக்கு பதில் தனுசை வைத்து புதிய படத்தை இயக்கப் போவதாக வெற்றிமாறன் அறிவித்து உள்ளார். வெற்றிமாறன் படத்தில் மீண்டும் நடிக்கப் போவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனுஷ் கூறியுள்ளார். ‘வட சென்னை’ படத்தை கிடப்பில் போட தனுஷ் காரணமாக இருக்கலாம் என்று சிம்பு தரப்பில் சந்தேகம் கிளம்பியுள்ளது. இதனால் சண்டை உருவாகியுள்ளது.

0 comments:

Post a Comment