• பொலிஸ் பாதுகாப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி



    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கோச்சடையான் படப்பிடிப்புகள் தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது.
    இதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா, கே.எஸ்.ரவிக்குமார், தீபிகா படுகோனே ஆகியோர் திருவனந்தபுரத்தில் தங்கியுள்ளனர்.


    சித்ராஞ்சலி ஸ்டூடியோ: இது கேரளாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்டூடியோ ஆகும். இங்கு தான் படப்பிடிப்புக்கான அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    திருவனந்தபுரம் கோவளம் ரோட்டில் உள்ள திருவல்லம் அழகான மலைப்பகுதியில் இந்த ஸ்டூடியோ அமைந்துள்ளது.

    புகழ்பெற்ற மலையாள இயக்குனர்கள் அடூர் கோபாலகிருஷ்ணன், ஷாஜி என்.கருண் ஆகியோர் இந்த ஸ்டூடியோவில் தான் படப்பிடிப்புகளை நடத்துவார்கள்.

    இங்குள்ள ரிக்கார்டிங் ஸ்டூடியோக்களில் பணியாற்றியவர்கள் நிறைய தேசிய விருதுகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    நவீன தொழில்நுட்பத்தில் கோச்சடையான் படத்தை இயக்கும் சவுந்தர்யாவுக்கு இந்த ஸ்டூடியோவில் உள்ள வசதிகள் தெரிய வந்ததால் படப்பிடிப்பை அங்கு நடத்தி வருகிறார்.

    ரஜினியின் தீவிர ரசிகரான கேரள அமைச்சரும் நடிகருமான கே.பி.கணேஷ்குமார் படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார்.

    படப்பிடிப்பின் ஆரம்ப திகதிகளில் ரசிகர்கள் தொல்லைகள் இருந்து வந்ததையடுத்து படப்பிடிப்பிற்கு இடையூறு வராமல் இருக்க கேரள பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சூப்பர் ஸ்டார் திருவனந்தபுரத்தில் உள்ள தாஜ் விடுதியில் தங்கி உள்ளார். அங்கும் பொலிஸ் மற்றும் தனிப்படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 comments:

Post a Comment