• மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயிலை தொடங்கி வைத்தார் ஹன்சிகா



    சென்னையிலிருந்து திருப்பதி சென்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ரயிலை நடிகை ஹன்சிகா மோத்வானி தொடங்கி வைத்தார்.
    ராஜஸ்தான் இளைஞர் சங்கம் என்ற தொண்டு நிறுவனம் சார்பில் சென்னை ரயில் நிலையத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பள்ளி மாணவ - மாணவிகள் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.


    இதற்காக ரயில்வே சார்பில் புட் பேங்க் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில் விடப்பட்டது.

    இந்த சிறப்பு ரயில் கடந்த 10ம்திகதி காலை 7.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டது.

    மேலும் நடிகை ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரயில் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த ரயில் பயணத்தில் 300 மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாணவ - மாணவிகள் உட்பட 1008 பேர் திருப்பதி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment