நடிகை த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொண்டு, சினிமாவுக்கு முழுக்கு போடப்போவதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
த்ரிஷாவின் பெற்றோர்கள் டாக்டர், என்ஜினீயர், தொழில் அதிபர், வெளிநாட்டு மாப்பிள்ளை என மாப்பிள்ளை பார்க்கும் பணியில் தீவிரமாக உள்ளனர். பல மாப்பிள்ளைகளின் ஜாதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதால் புதுப்படங்களில் நடிப்பதை த்ரிஷா நிறுத்தி விட்டார். இதனை உறுதிப்படுத்தும் விதமாக, தெலுங்கில் கடைசியாக நடித்த ”தம்மு” படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில், கண் கலங்கி டைரக்டர், ஒளிப்பதிவாளர், போன்றோரின் கால்களில் விழுந்து வணங்கி விடைபெற்றார் த்ரிஷா. தற்போது தமிழில் விஷால் ஜோடியாக ”சமரன்” படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள த்ரிஷா முடிவு செய்திருப்பதாக தகவல்களும் வெளியாகியுள்ளன.
0 comments: