• கமலஹாசன் முதன் முறையாக விளம்பர படங்களில் நடிக்கிறார்...!?



    பிரபல நடிகர், நடிகைகளை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசனும் முதன் முறையாக விளம்பர படங்களில் நடிக்கவுள்ளார்.

    முன்னனி நடிகர், நடிகைகள் பலர் விளம்பர படங்களில் நடித்து, தன்னுடைய பேரையும் புகழையும் மக்களிடையே வளர்த்து வருவதோடு, மிக உயர்ந்த சம்பளத்தையும் பெற்று வருகின்றனர்.
    அந்த வகையில் இதுவரை, விளம்பர படங்களில் தலை காட்டாமல் இருக்கும் மிக முக்கிய தமிழ் நடிகரான உலகநாயகன் கமலஹாசன், தற்போது விளம்பர படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

    இதையடுத்து, முதல் முறையாக விளம்பர படங்களில் நடிக்க மும்பை நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளார் கமல். பாலிவுட் முன்னனி நட்சத்திரங்களான அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான, கரீனாகபூர், பிரியங்கா சோப்ரா போன்றோர் இந்நிறுவனத்தின் விளம்பர படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதேபோல் 50 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், கமல் முதல் முறையாக விளம்பரங்களில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment