• விஜயின் ”தளபதி ஆன்தம்” இன்று ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது!



    சென்னையில் விஜயின் “தளபதி ஆன்தம்” ரசிகர்கள் மத்தியில் இன்று வெளியிடப்பட்டது. இளையதளபதி விஜய் விழாவினை சிறப்பித்ததுடன் இரண்டு பாடல்கள் கொண்ட ”தளபதி ஆன்தம்” ஆல்பத்தை வெளியிட்டார்.


    தளபதி ஆன்தம் விஜய் பற்றிய ஒரு பாடல் தொகுப்பாகும். இது உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் சி.ஆர். வாட்சன். இதன் பாடல் வரிகளை தினேஷ் எழுதியிருக்கிறார். இதன் “ரேப்” பகுதியை ஆமொக்ஹ பண்ண கௌதம் தொகுத்து வழங்கியிருகிறார்.

    அப்போது விஜய் கூறியதாவது :

    ”இது என்னுடைய ஆல்பம் என்பது முக்கியமல்ல. மாறாக இந்த விழாவில் கலந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்த நேரத்தில் ”தளபதி ஆன்தம்” உருவாக்க் காரணமாக இருந்த அணைத்து உள்ளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

    என்னுடைய ரசிகர்கள் அனைவரும் ரசிகர்கள் அல்ல, எனது நண்பர்கள் என்று விஜய் கூறும்போது ரசிகர்கள் கூச்சலிட்டு ஆராவாரம் செய்தனர். மேலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் மாநில அளவில் முதன்மையாக வெற்றிபெறும் மாணவர்களுக்கு ஒரு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருப்பதாகவும், இனி வரும் காலங்களிலும் இதனை தொடருவேன் என்றும் கூறினார்.

0 comments:

Post a Comment