தனுஷ் நடித்த ’3′ படம் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் பற்றியும் அதில் இடம் பெற்றுள்ள கொலை வெறி பாடல் பற்றியும் தனுஷ் அளித்த பேட்டி வருமாறு:-
3 படம் ஹிட்டானதா? இல்லையா? என்று எனக்கு தெரியாது. எனவே அதுபற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால் இப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கு போதுமான பணம் கிடைத்துள்ளது என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
கொலை வெறி பாடல் இந்த அளவுக்கு பிரபலமாகி எனக்கு பெரிய அந்தஸ்தை பெற்றுத் தரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இந்த பாடல் ஹிட் மூலம் முடியாதது எதுவுமில்லை. எல்லாமே முடியக்கூடியது என்று கற்றுக் கொண்டேன்.
நடனம் ஆடவும், பாடவும் எனக்கு பிடிக்கிறது. கொலை வெறி பாட்டில் ஆங்கில வார்த்தைகள் கலந்ததற்காக விமர்சனங்கள் கிளம்பின. நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் எனது உலகத்தில் நான்தான் ராஜாவாக இருந்தேன். நடிகரானதும் எனக்கு ஆங்கிலம் தெரியாததால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளானேன்.
என்னுடன் நடித்த நடிகர்-நடிகைக்ள எல்லோரும் வேறு மாநிலங்களில் இருந்து வந்தனர். அவர்களிடம் அவரவர் மொழியில் என்னால் பேச முடியவில்லை. நட்சத்திர ஓட்டல்களில் கூட ஆர்டர் செய்ய முடியாமல் சிரமப்பட்டேன்.
ஆங்கில அறிவு இன்மையால் எனது நம்பிக்கை முழுமையாக சிதைந்து போனது. எனது உணர்வுகள் நிறைய பேரிடம் இருப்பதை தெரிந்து கொண்டேன். அதை கொலைவெறி பாட்டில் பிரதிபலித்தேன். அப்பாடல் விமர்சிக்கப்பட்டது.
மயக்கம் என்ன படத்தில் பிறை தேடும் இரவிலே என்ற பாடல் முழுவதும் தமிழில் இருந்தது. எந்த பாடல் பற்றி யாரும் பேசவில்லை. சொல்வராகவன் இயக்கும் படத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை. ஆனாலும் இருவரும் சேர்ந்து படம் பண்ணுவோம். இந்திப் படத்திலும் நடிக்க உள்ளேன்.
இவ்வாறு தனுஷ் கூறினார்.
0 comments: