கடந்த 2000ம் வருடம் ஏப்ரல் 24ம் திகதி அஜித்குமார், ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
அஜித்குமாருக்கும் ஷாலினிக்கும் தங்களது காதல் திருப்புமுனையாக அமர்க்களம் படம் அமைந்தது என்பதை திரையுலகம் நன்கு அறியும்.
திருமணத்துக்குப் பின்னர், திரையுலகில் அஜித் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக உயர்ந்தார்.
இவர்களுக்கு கடந்த 2008ம் வருடம் அனோஷ்கா என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் அஜித்குமார், ஷாலினி ஜோடி தங்களது திருமண நாளை சென்னையில் வைத்து கொண்டாடினார்கள்.
தற்போது அஜித்குமார் நடித்துள்ள “பில்லா 2” திரைப்படம் இன்னும் சில மாதங்களில் திரைக்கு வரவுள்ளது.

0 comments: