• திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகின்ற பிரசன்னா, சினேகா



    கொலிவுட் நடிகர்கள் பிரசன்னா, சினேகா ஜோடிக்கு வருகிற மே மாதம் 11ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது.
    தற்போது இரு வீட்டு பெற்றோரும் திருமண வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


    இதற்கிடையில் சினேகாவும், பிரசன்னாவும் சகநடிகர், நடிகைகள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனித்தனியாக சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள்.

    கமல், அஜீத், விஜய் போன்றோருக்கு பிரசன்னா நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து பிரசன்னா கூறியதாவது: திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்க தொடங்கி விட்டேன்.

    கடந்த சில திகதிகளாக நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகினரை நேரில் சந்தித்து அழைப்பிதழ்கள் கொடுத்து வருகிறேன்.

    இளைய தளபதி விஜய், தல அஜீத் போன்றோரை சந்தித்து அழைப்பிதழ் கொடுத்து திருமணத்துக்கு அழைத்தேன் என்றார்.

    ஏற்கனவே நடிகர் கமலஹாசனுக்கு அழைப்பிதழ் கொடுத்துள்ள பிரசன்னா, இனி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அழைப்பிதழ் கொடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்

0 comments:

Post a Comment