• உடல் உறுப்புக்களை தானம் செய்யும் சினேகா, பிரசன்னா



    தங்களது உடல் உறுப்புக்களை தானம் செய்ய திருமண ஜோடி பிரசன்னா, சினேகா ஒப்புக்கொண்டுள்ளனர்.
    திரையுலக பிரபலங்கள் தங்கள் பெயரில் அறக்கட்டளைகளை நிறுவி பொது மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார்கள்.


    இந்நிலையில் விரைவில் திருமணம் செய்ய உள்ள பிரசன்னா, சினேகா இருவருமே தங்களையும் இந்த பட்டியலில் இணைத்து கொண்டுள்ளார்கள்.

    சகா அறக்கட்டளை நிறுவனம் சார்ப்பில் பென்னி தயாள் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

    அதில் பிரசன்னா-சினேகா இருவருமே சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

    உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சகா அறக்கட்டளை நிறுவனம் நடத்திய இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த நட்சத்திர ஜோடி, தங்களது உடல் உறுப்பு தானத்திற்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் பிரசன்னா, எங்கள் மீது அன்பு வைத்திருக்கும் இந்த சமுதாயத்திற்கு எங்களுடைய பங்காக, நாங்கள் இந்த நல்ல காரியத்தில் ஈடுபட்டோம் எனத் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment