• ரஜினியின் மகள்கள் இடையிலான ஈகோ சண்டை



    லண்டன் பைன்வுட் ஸ்டூடியோவில் நடந்து வந்த ‘கோச்சடையான்’ படப்பிடிப்பில் இருந்து பாதியில் சென்னை திரும்பி விட்டார் என பரபரத்தன சென்னை ஊடகங்கள்.

    ஆனால் திட்டமிட்ட 20 நாள் படப்பிடிப்பை முன்னதாகவே ரஜினி முடிந்துவிட்ட காரணத்தாலேயே சென்னை திருப்பினார் என சௌந்தர்யா தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
    உண்மையில் ரஜினியின் மகள்கள் இடையிலான குடும்ப ஈகோ சண்டை காரணமாகவே பிரச்சினை வெடித்தது என்றும், மகள்களின் சண்டையை பைசல் பண்ணவே அப்பா ரஜினி சென்னை வரவேண்டியதாயிற்று என்றும் முன்னணி வார இதழ்களே சூட்டைக் கிளப்ப, அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை! எல்லாம் புருடா என்பது போல, தமிழ்சினிமாவின் மிக முக்கியமான விஜபிகளில் ஒருவரான ஏ.வி.எம் சரவணனனை, ஏ.வி.எம்.ஸ்டூடியோவில் உள்ள அவரது அலுவலகத்தில் ரஜினி சந்தித்துப் பேசியிருக்கிறார் என்ற தகவலை உறுதிப் படுத்தியிருக்கிறார்கள்.
    இந்தசந்திப்பு, ஏ.வி.எம் நிறுவனத்துக்கு ரஜினி அடுத்தப் படம் பண்ண இருப்பதற்கான அச்சாரம் என்கிறார்கள் ஏ.வி.எம். செய்தித் தொடர்பாளர் வட்டத்தில் இருந்து. ஏற்கனவே ரஜினியை வைத்து ஏ.வி.எம். தயாரித்த ‘சிவாஜி’ படம் சூப்பர் ஹிட்டாகி ஓடியது. ரஜினி ஏ.வி.எம் மீண்டும் இணைந்தால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தாமதம் செய்யாமல் அறிவித்து விடுவார்கள். அல்லது ஏ.வி.எம் சரவணன் இது பற்றி விளக்கம் தந்துவிடுவார் என்கிறார்கள்…பார்க்கலாம்!

0 comments:

Post a Comment