• கமலின் விஸ்வரூபத்தை வாங்கும் ஜெயா பிக்சர்ஸ்



    உலகநாயகன் கமல் ஹாசனின் “விஸ்வரூபம்” திரைப்படத்தை ஜெயா பிக்சர்ஸ் விலைக்கு வாங்க உள்ளது.
    மன்மதன் அம்பு திரைப்படத்திற்கு பிறகு உலக நாயகன் கமல், விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தை கமலே இயக்குகிறார். இவருடன் பூஜா குமார், ஆண்ட்ரியா நாயகிகளாக நடிக்கிறார்கள்.

    ஷங்கர் இஷான் லாய் இசையமைக்கிறார். இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தின் விநியோக உரிமையை ஜெயா தொலைக்காட்சி நிறுவனம் வாங்கவுள்ளது.

    இதற்காக ஜெயா பிக்சர்ஸ் என்ற புதிய திரைப்பட கம்பெனியை தொடங்கவுள்ளது.

    சமீபகாலமாக கொலிவுட்டில் பட நிறுவனங்கள் அதிகரித்து வருகிறது. சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட “சன் பிக்சர்ஸ், க்ளவுட் நைன் மூவிஸ், ரெட் ஜெயண்ட் ஆகிய திரைப்பட விநியோக நிறுவனங்கள் சினிமா வர்த்தகத்தில் அபார வெற்றியடைந்துள்ளது.

    இந்நிலையில் ஜெயா பிக்சர்சும் இந்த நிறுவனங்களின் வரிசையில் இடம் பெற்று அதிக லாபத்தை ஈட்டும் என்று கொலிவுட்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment