• திரையுலக தோல்விகள் குறித்து ஸ்ரேயா பேட்டி



    தமிழில் தற்போது படவாய்ப்புகள் இழந்துள்ள ஸ்ரேயா, தெலுங்கு மற்றும் ஆங்கில படங்களில் நடித்துவருகிறார்.
    சமீபத்தில் ஊடக துறையினரிடம் நாயகி ஸ்ரேயா அளித்த பேட்டியில், வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக பல சம்பவம் நடந்து வருகிறது.


    மேலும் இன்று எடுக்கும் முடிவு எதிர்காலத்தில் என்ன பலனை கொடுக்கும் என்று யோசிக்கிற திறமை எனக்கு இல்லை.

    நான் நிறைய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டபோது அது ஜெயிக்குமோ தோற்குமா என்று மதிப்பீடு செய்ய முடியாமல் போய் விட்டது. இதன் காரணமாக நிறைய தோல்விகளை பார்த்தேன்.

    மேலும் கவர்ச்சியாக நடித்து, ஆபாசமாக தெரியாமல் அழகைக் காட்டவேண்டும். நினைத்ததையெல்லாம் செய்யக் கூடாது. இத்தகைய கட்டுப்பாடுகளின் மத்தியில் நான் நடித்த படங்களில் நான் முழு திறமையை காட்டி உள்ளேன்.

    சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். தலை எழுத்தை மாற்ற முடியாது. ஒரு படம் வெற்றியானால் வாழ்க்கையே தலைகீழாக மாறி விடும்.

    அந்த படத்துக்காகத்தான் ஒவ்வொரு நடிகர், நடிகையும் காத்திக்கிறார்கள். எனக்கு அது மாதிரி படங்கள் நிறைய வந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment