• இனி எதற்கும் கலங்க மாட்டேன்: நயன்தாரா


    காதல் பிரச்சினைகளிலிருந்து மீண்ட கொலிவுட் நாயகி நயன்தாரா, தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

    தனக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தன்னை பக்குவப்படுத்தியுள்ளதாக நயன்தாரா தெரிவித்துள்ளார்.


    இதுகுறித்து நாயகி நயன்தாரா பேசியதாவது, சமீபத்தில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தேன். கஷ்டங்களை அனுபவித்தேன்.

    அவை என்னை பக்குவப்படுத்தி இனி என்ன பிரச்சினைகள் வந்தாலும் எதிர் கொள்ளலாம் என்ற மனதிடத்தை அளித்துள்ளது.

    இதன் மூலம் இனி எதற்கும் கலங்க மாட்டேன். பிரச்சினைகளை எப்படி வந்தாலும் சந்திப்பேன் என்றார்.

    வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நம் நல்லதுக்குத்தான் என்று பெரியவர்கள் சொல்வதை கேள்விப்பட்டிருக்கின்றோம். அது என் வாழ்க்கையில் நிஜமாகியுள்ளது.

    எனக்கு நடந்த சம்பவங்கள் நல்லதுக்குத்தான் என்று எடுத்துக் கொண்டுள்ளேன். மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளேன்.

    த்ரிஷாவுடன் எனக்கு மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் வருகின்றன. பத்திரிகைகளில் வெளியாகும் இது போன்ற செய்திகளுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டு கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment