இயக்குனர் எழில் இயக்கித் தயாரித்துள்ள மனம் கொத்தி பறவை படத்தில் முதல் முறையாக நாயகனாக சிவகார்த்திகேயன், கேரள நாயகி ஆத்மியா உடன் இணைந்து நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் எழில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் சிங்கம் புலி, சூரி, சாம்ஸ், ஸ்ரீநாத், கிஷோர், இளவரசு, ரவி மரியா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில், என்னை நிறைய பேர் இந்தப்படத்தின் நாயகன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
படத்தில் வருகிற முக்கியமான கதாபாத்திரங்களில் நானும் ஒருவன் அவ்வளவுதான். படத்தை பொறுத்தவரை கதை தான் ஹீரோ என்று தெரிவித்துள்ளார்.
சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்த சிவகார்த்திகேயன், மெரீனா, 3 ஆகிய படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments: