• ”துப்பாக்கி” யின் ஃபர்ஸ்ட் லுக் ஸ்டில்களை நாளை வெளியிடுகிறார் விஜய்!



    நடிகர் விஜய் “நண்பன்” படத்திற்கு பிறகு, இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கும் ”துப்பாக்கி” படத்தில் நடித்துவருகிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.


    விஜய் – ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதில் இயக்குனர் முருகதாஸ் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரும், விஜயின் வேண்டுகோளுக்கிணங்க சிறு வேடங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

    தற்போது ”துப்பாக்கி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முன்னோட்ட புகைப்படங்கள் மற்றும் போஸ்டர்களை நாளை வெளியிடுகிறார் இயக்குநர் முருகதாஸ் மற்றும் இளைய தளபதி விஜய். இதற்கான அறிவிப்பை நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment