• ’3’ படத்திலிருந்து அமலா பால் விலகிய ரகசியம்!



    சமீபத்தில் ரிலீஸான ‘3’ படத்திலிருந்து நடிகை அமலா பால் விலகியதன் ரகசியம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.

    ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷின் ’3’ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் தனுஷிற்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார்.
    ஆனால் இப்படத்தில் முதலில் அமலா பால் தான் கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. திடீரென்று அவர் இப்படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

    இதற்கு காரணம் என்ன...? என்பதை இது நாள் வரை மூடி மறைத்து வந்த அவர் இப்போது, முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். ‘3’ படத்தில், மிக நெருக்கமான காதல் காட்சிகளும், முத்தக் காட்சிகளும் இருப்பதாக சொன்னார்கள். என்னால் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க முடியாது என்பதால் தான், அந்த படத்திலிருந்து விலகினேன் என்று அமலா பால் கூறினார்.

0 comments:

Post a Comment