அஜித்தும், நானும் நல்ல நண்பர்கள். ஆனால் சினிமாவில் மட்டும் சண்டை போட்டு கொள்வோம் என்று அதிரடியாக கூறியுள்ளார் நடிகர் விஜய்.
பிரபலமான முன்னனி ஹீரோவாக இருக்கின்றனர் நடிகர் அஜித்தும், விஜயும். இந்நிலையில் விஜய் தன் நண்பர் அஜித் பற்றி, சமீபத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
சினிமாவில் நடிக்க வரும் எல்லா ஹீரோக்களும் ரொமான்டிக் படங்களிலிருந்து அதிரடி படங்களுக்கு மாறுவார்கள். என்னுடைய சினிமா வாழ்க்கையில், சில இடைப்பட்ட காலங்களில் மட்டுமே ரொமான்ட்டிக் ரோலில் நடித்திருக்கிறேன். இப்போது ஆக்ஷ்ன் ஹீரோவாக மாறியிருக்கிறேன். நான் காமெடி கலந்த ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க தான் ஆசைப்படுகிறேன். ஆனால், இன்றைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை உணர்ந்து கமர்ஷியல் படங்களில் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது என்றார்.
மேலும் சினிமாவில், ரஜினி-கமல் ஆகியோரைத் தொடர்ந்து எனக்கும், அஜித்துக்கும் போட்டி என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் சினிமாவில் மட்டும் தான் நானும், அஜித்தும் போட்டியாளர்கள். மற்றபடி அஜித்தும், நானும் நெருங்கிய நண்பர்கள். நாங்கள் இருவரும் நேரம் கிடைக்கும் போது சந்தித்து கொள்வோம். நான் அவருடைய வீட்டிற்கு போவதும், அவர் என்னுடைய வீட்டிற்கு வருவதும் உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments: