உதயநிதி ஸ்டாலின்- ஹன்சிகா நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படம் தமிழ் புத்தாண்டில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படம் பற்றி ஹன்சிகா கூறுகையில், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நான் நடித்துள்ள மீரா கதாபாத்திரம் மிகவும் சவாலாக இருந்தது.
மற்றவர்களிடம் கோபமாகவும் பிறரை இம்சைபடுத்துவது போன்றும் அந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது.
நிஜத்தில் நான் அப்படி இல்லை. பிறரை நோகடிக்கும் குணம் எனக்கு இல்லை. சாதாரணமாக அமைதியான சுபாவத்தினைக் கொண்டவள்.
ஒரு கல் ஒரு கண்ணாடி எனக்கு முக்கியமான படம், மும்பையில் இருப்பதால் ரசிகர்களுடன் சேர்ந்து இதை பார்க்க முடியவில்லை.
நணபர்களிடம் இருந்து இந்த படம் பற்றிய விமர்சனங்களை எதிர்பார்த்து காத்து இருக்கிறேன். கடந்த ஒரு வருடமாக இந்த படத்தில் கஷ்டப்பட்டு நடித்தேன்.
இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துப் பாடல்களும் பிடித்துள்ளது, ஆனால் காதல் ஒரு பட்டர் பிளை என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான பாடலாகும்.
இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூடன் இணைவது இரண்டாவது படமாகும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
0 comments: