• திருமண ஏற்பாட்டினால் புது படங்களில் நடிக்க மறுக்கும் திரிஷா



    நாயகி திரிஷாவிற்கு திருமண ஏற்பாடுகள் நடைபெறுவதால் புதுப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாக தகவல் வெளிவந்துள்ளன.

    நாயகி திரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாகவும், அவருக்கு மாப்பிள்ளை தேடும் பணியில் பெற்றோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளன.


    டாக்டர், என்ஜினீயர், தொழில் அதிபர், வெளி நாட்டு மாப்பிள்ளை என பலரின் ஜாதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து வருகின்றனர்.

    திருமண ஏற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு புதுப்படங்களில் நடிப்பதை திரிஷா நிறுத்தவிட்டார்.

    தெலுங்கில் கடைசியாக நடித்த தம்மு படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது.

    படப்பிடிப்பு முடிந்ததும் கண் கலங்கி இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர்களின் கால்களில் விழுந்து வணங்கி விடை பெற்றுள்ளார்.

    மேலும் விஷால் ஜோடியாக நடிக்கும் சமரன் படமே அவரது கடைசி தமிழ் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த படம் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

0 comments:

Post a Comment