• ஆடம்பரமாக நண்பர்களுடன் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடிய நயன்தாரா



    பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பின்பு நயன்தாரா மீண்டும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    தற்போது தெலுங்கில் ராணாவுடன் ஒரு படத்திலும், கோபிசந்துடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.


    இந்த படங்களில் நடிப்பதற்காக ஐதராபாத்தில் உள்ள ஒரு 5 நட்சத்திர உணவுவிடுதியில் தங்கியிருக்கும் நயன்தாரா நேற்று தோழிகள் சிலருடன் சேர்ந்து ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடினார்.

    ஏற்கனவே ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கிறிஸ்தவர் என்ற போதிலும் தீபாவளி, கிறிஸ்துமஸ் என அனைத்து பண்டிகைகளை கொண்டாடுவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று ஈஸ்டர் பண்டிகையை கோலாகலமாக கொண்டாட முடிவு செய்து, தான் தங்கியிருந்த உணவு விடுதிக்கு நண்பர்களை வரவழைத்து பல விதமான சாப்பாட்டை ஆர்டர் செய்து நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார்.

    இதுகுறித்து நயன்தாரா கூறுகையில், முதல் முறையாக குடும்பத்துடன் இல்லாமல் தனியாக பண்டிகையை கொண்டாடுகிறேன்.

    இது மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும், நண்பர்களுடன் ஈஸ்டர் கொண்டாடியது மகிழ்ச்சியாகவே இருக்கிறது என்றார்.

0 comments:

Post a Comment