வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி சாரி வெறும் ஹன்சிகா தேர்வாகியுள்ளார்.
நிக் ஆர்ட்ஸ் சிம்புவை வைத்து எடுக்கும் படம் வாலு. புதிய இயக்குநர் விஜய் இயக்குகிறார். சிந்தனை செய் இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான விஜய். தமன் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சிம்புவுக்கு யாரை ஜோடியாகப் போடுவது என்று ஒரு அலசு அலசினர். இறுதியாக சிக்கியது ஹன்சிகா.
நிக் ஆர்ட்ஸ், சிம்பு, ஹன்சிகா மீண்டும் சேரும் படம் தான் வாலு. ஏற்கனவே சிம்பு நடிக்கும் வேட்டை மன்னனை நிக் ஆர்ட்ஸ் தயாரிக்க அதில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் ஒன்று சேர்கிறது.
வேட்டை மன்னன் முடிந்த பிறகு வாலு துவங்ப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து நாயகன் சிம்பு கூறுகையில்,
வாலு படத்தில் எனக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இது காதல் பிளஸ் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும். இந்த படத்தை பற்றி இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றார்.
0 comments: