1994-ல் உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யாராய் சினிமாவுக்கு வந்து நம்பர் ஒன் நடிகையாக உயர்ந்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மொழிப்படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர் பட்டாளத்தை பெற்றார்.
வசீகர முக அழகு, ஒல்லி உடம்பில் காட்டிய நடன அசைவுகள். காந்த பார்வை கவர்ச்சி சிரிப்பு அனைத்திலும் ரசிகர்கள் கிறங்கி போய் கிடப்பார்கள்.
திருமணமான பிறகும் தொடர்ந்து நடித்தார். தமிழில் ராவணன், எந்திரன் படங்கள் அவர் திருமணத்துக்கு பின் நடித்து வெளி வந்தவை. இந்த படங்களிலும் இளமை பொலிவு குன்றாமலேயே இருந்தார்.
ஐஸ்வர்யாராய்க்கு கடந்த வருடம் பெண் குழந்தை பிறந்தது. கர்ப்பமானதில் இருந்தே சினிமாவில் நடிப்பதை நிறுத்தினார். பிரசவத்துக்கு பிறகும் நடிக்கவில்லை. பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டாமல் இருந்ததால் அவரது இப்போதைய தோற்றம் யாருக்கும் தெரியவில்லை.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு காரில் ஏறிய அவரை புகைப்படக்காரர் படம் பிடித்தார். படத்தில் ஐஸ்வர்யாராய் குண்டாக இருந்தது தெரிய வந்தது. முகத்தில் சதை பிடிப்பு காணப்பட்டது. அதோடு முதிர்ச்சியும் தெரிந்தது.ஐஸ்வர்யாராய்க்கு தற்போது 38 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உடற்பயிற்சிகள் மூலம் உடம்பை பேணாமல் குண்டாகி விட்டதால் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
0 comments: