கோச்சடையான் படத்திற்காக நாயகி தீபிகா படுகோனுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரத நாட்டியம் ஆடியுள்ளார்.
கோச்சடையான் படம் வரலாற்று சரித்திர கதை என்பதால் சிவபெருமானின் ருத்ர தாண்டவத்திற்கு நிகரான ஒரு பாடல் இதில் இடம்பெறுகிறது.
இப்பாடலுக்கான படப்பிடிப்பு கேரளாவில் நடைபெற்று வருகிறது.
இப்பாடலுக்குத் தான் சூப்பர் ஸ்டாரும் தீபிகாவும் பரத நாட்டியம் ஆடியுள்ளனர்.
இந்தி நடன இயக்குனர் சரோஜ்கான் இதற்கான நடனத்தை அமைத்துள்ளார். இதுகுறித்து சரோஜ்கான், தமிழ் படங்களில் நீண்ட திகதிகளுக்கு பின்பு நான் பணியாற்றுகின்றேன்.
அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் படத்தில் பணியாற்றுவது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.
சூப்பர் ஸ்டார் கோச்சடையான் படத்தில் நடனம் ஆட அயராது பயிற்சிகள் எடுத்து நடனமாடினார் என்றார்.
0 comments: