மச்சான்ஸ் என்ற வார்த்தையை தமிழ்ப்படுத்தி அதற்கு புது அர்த்தமும் சொன்ன கவர்ச்சிக் குண்டு நமீதாவுக்கு நேற்று பிறந்த நாள்.
ஒரு தனியார் வானொலி நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் தன் பிறந்த நாளை சென்னையில் கொண்டாடினார் நமீதா.
நமீதா நடிக்க வந்து 8 ஆண்டுகள் ஆகின்றன. முதல் படம் எங்கள் அண்ணா.
ஆரம்பத்திலிருந்தே சீனியர் நடிகர்களுடன் மட்டுமே நடித்து வந்த நமீதா, பின்னர் அஜீத், விஜய்யுடனும் தலா ஒரு படம் நடித்தார். ஒரு கட்டத்தில் நமீதாவுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள். ஆறடி உயர ஆல்கஹால் பாட்டில் என்றே அவரை வர்ணித்தனர்.
ஆனால் தொடர் தோல்விகள் காரணமாக 2010-க்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தன.
இப்போது கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்கள் சிலவற்றில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் மீண்டும் பிஸியாகும் நோக்கத்தோடு சென்னையில் உள்ள தன் வீட்டிலேயே தங்கியிருக்கிறார் நமீதா.
ஆண்டுதோறும் தன் பிறந்த நாளின்போது சென்னையில் இருக்கும்படி பார்த்துக் கொள்வார் நமீதா. இந்த ஆண்டும் சென்னையில் ஒரு தனியார் வானொலி நிலையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடினார். அந்த வானொலி மூலம் மச்சான்ஸ்களுடன் போனில் பேசி 'கிக்'கேற்றினார்!
0 comments: