• இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் - விஜய் மீண்டும் உறுதி



    பசுமைத் தாயகம் விடுத்த வேண்டுகோளைத் தொடர்ந்து இனி புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன், என மீண்டும் உறுதி கூறியுள்ளார் நடிகர் விஜய்.


    நடிகர் விஜய் தனது அடுத்த படமான துப்பாக்கிக்காக சுருட்டுப் பிடிப்பது போல போஸ் கொடுத்தாலும் கொடுத்தார், அதுவே அந்தப் படத்துக்கு பெரிய பப்ளிசிட்டியாகிவிட்டது.

    இந்த விளம்பரத்தைக் கண்டித்து பாமகவின் பசுமைத் தாயகம் களத்தில் இறங்க, துப்பாக்கியில் புகைப் பிடிக்கும் காட்சிகளே இருக்காது என்று அறிவித்துவிட்டார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ்.

    அப்படியும் பாமக விடவில்லை. 2007-ம் ஆண்டு புகைப்பிடிக்க மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த விஜய், அதை மீறும் வகையில் நடந்து கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பி அறிக்கைவிட்டது.

    இப்போது, அதற்கும் பலன் கிடைத்துவிட்டது.

    "இனி எந்தப் படத்திலும் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நான் தோன்ற மாட்டேன். இந்த உறுதியைக் காப்பாற்றுவேன்," என கூறியுள்ளார் விஜய்.

    அப்படியே பஞ்ச் டயலாக்குக்கும் ஒரு சத்தியம் வாங்கிட்டா தேவலை!!

0 comments:

Post a Comment