எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தொடர்ந்து ஜெயம் ரவியுடன் மழை, ரஜினியுடன் சிவாஜி, விக்ரமுடன் கந்தசாமி, விஜய்யுடன் அழகிய தமிழ்மகன் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழி படங்களிலும் நடித்தார். ஆனால் சமீபத்திய காலமாக அவருக்கு தமிழ் சினிமாவில் போதிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதனால் பீல்ட் அவுட் நடிகையாக இருக்கிறார். கடைசியாக ராஜபாட்டை படத்தில் விக்ரம் மற்றும் ரீமா சென் உடன் சேர்ந்து ஒரு குத்தாட்டம் போட்டார் ஸ்ரேயா. இந்நிலையில், இப்போது மீண்டும் ஒரு படத்தில் ஹீரோயினாக களம் இறங்குகிறார். கன்னட டைரக்டர் ரூபா ஐயர் தமிழ் மற்றும் கன்னட ஆகிய இரண்டு மொழியிலும் இயக்கும் புதிய படம் ஒன்றில் ஸ்ரேயா நடிக்கவுள்ளார்.
இதுகுறித்து ரூபா ஐயர் கூறுகையில், ஆம்! ஸ்ரேயா என்னுடைய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் அப்போது வாழ்ந்த கடைசி இளவரசி ஒருவரின் காதல் கதை. இது ஒரு உண்மை சம்பவமும் கூட. இதற்காக நான் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, பல தகவல்களை சேகரித்து இந்த கதையை உருவாக்கியுள்ளேன். முன்னதாக இந்த கதையில் நடிக்க திவ்யா ஸ்பந்தனாவிடம் கால்ஷீ்ட கேட்டேன். ஆனால் அவர் முடியாது என்று கூறிவிட்டதால் ஸ்ரேயாவை தேர்வு செய்தேன். நிச்சயம் என்னுடைய கதைக்கு ஏற்ற இளவரசியாக ஸ்ரேயா இருப்பார் என்று கூறியுள்ளார்.
ஸ்ரேயா கன்னட சினிமாவில் ஹீரோயினாக களம் இறங்கும் முதல்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு படத்தில் புனித் ராஜ்குமாருடன் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடித்து இருக்கிறார் ஸ்ரேயா
0 comments: