• ஹனிமூனுக்கு அமெரிக்கா பறக்கும் சினேகா-பிரசன்னா…!



    புதுமன தம்பதிகளாய் மாறியிருக்கும் சினேகா-பிரசன்னா ஜோடி விரைவில், ஹனிமூனுக்காக அமெரிக்கா பறக்க இருக்கின்றனர். நீண்டநாள் காதலர்களாக இருந்து வந்த சினேகா-பிரசன்னா ஜோடிக்கு சென்னையில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் திருமணம் நடந்தது.
    சினேகா வீட்டு முறைப்படியும், பிரசன்னா வீட்டு முறைப்படியும் திருமணம் நடந்ததால், சினேகா கழுத்தில் இரண்டு முறை தாலி கட்டி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார் பிரசன்னா. இந்த திருமணத்தில் இருவீட்டாரது உறவினர்கள், நண்பர்கள், திரைநட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்களது திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் நடிகர், நடிகையருக்காக பிரத்யேகமாக திருமண வரவேற்பு மற்றும் விருந்துக்கு சினேகாவும், பிரசன்னாவும் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த திருமண வரவேற்பு சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று மாலை நடக்கிறது. இதில் தமிழ் மற்றும் தெலுங்கு உலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே தங்களது ஹனிமூனை வெளிநாட்டில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர் சினேகா-பிரசன்னா. அச்சமுண்டு அச்சமுண்டு படம் ‌அமெரிக்காவில் உருவான போதுதான் சினேகாவும், பிரசன்னாவும் காதலிக்க தொடங்கினர். அதன்காரணமாக தங்களது ஹனிமூனை அமெரிக்காவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். இதற்காக அமெரிக்காவில் சில குறிப்பிட்ட இடங்களை இருவரும் தேர்வு செய்துள்ளனர். இன்னும் ஒருவாரத்தில் இருவரும் ஹனிமூனுக்காக அமெரிக்கா பறக்க இருக்கின்றனர்.

0 comments:

Post a Comment