சூப்பர் ரஜினிகாந்த் கோச்சடையான் குழுவில் பணிபுரிபவர்களுடன் அவரவர் தாய் மொழியில் பேசி அசத்துகிறாராம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகை தீபிகா நடித்து வரும் படம் கோச்சடையான்.
முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கேரளாவிலும் முடிந்த நிலையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்புக்காக கோச்சடையான் படக்குழு நேற்று தான் ஹாங்காங் புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில் படக்குழுவில் பல்வேறு மொழி பேசுபவர்கள் இடம் பெற்றுள்ளனர். நம்ம சூப்பர் ஸ்டாருக்கு தான் பல மொழிகள் தெரியும் அல்லவா.
அதனால் படக்குழுவினருடன் பேசுகையில் அவரவர் தாய் மொழியில் பேசி அசத்துகிறாராம். இது படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளதாம். உதாரணமாக இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப்புடன் பேசுகையில் இந்தியிலும், தீபிகாவுடன் கன்னடத்திலும் பேசுகிறாராம்.
தீபிகா இந்தியில் நடித்தாலும் கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பணக்காரன் படத்தில் ரஜினி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பல்வேறு வில்லன்களுடன் பேசி பேசி அசத்தியது போல் நிஜத்திலும் பல மொழிகளில் பேசி அசத்துகிறார்.
0 comments: