• அஜித்குமார்- ஆர்யா இணையும் படம்



    ஏ.எம்.ரத்னம் தயாரிப்பு மேற்பார்வையில், ஸ்ரீ சத்ய சாயி மூவிஸ் சார்பில், ஏ.ரகுராம் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தை விஷ்ணுவர்த்தன் இயக்க உள்ளார்.
    இப்படத்தில் முதன் முறையாக அஜித்குமாருடன் ஆர்யா இணைந்து நடிக்க உள்ளார். இவர்களுடன் நயன்தாரா மற்றும் டப்சியும் நடிக்க உள்ளனர்.


    பில்லா வெற்றி பட கூட்டணி அஜித்குமார்- நயன்தாரா- விஷ்ணுவர்த்தன்- யுவன்சங்கர் ராஜா மீண்டும் இணைய உள்ளனர்.

    இப்படத்தின் கதை, திரைக்கதையை சுபா, விஷ்ணுவர்த்தன் இருவரும் இயற்ற, சுபாவின் வசனத்தில் பி.எஸ் வினோத் ஒளிப்பதிவில், அனுவர்த்தன் ஆடை வடிவமைக்கிறார்.

    மேலும் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்ய, சுனில் பாபு அரங்கமைக்க, சுந்தராஜன் தயாரிப்பு நிர்வாகத்தில் உள்ள பெயரிடப்படாத இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வருகின்ற 31ஆம் திகதி மும்பையில் தொடங்க உள்ளது.

0 comments:

Post a Comment