இனி மும்பையில்தான் தங்கப் போகிறேன். மீண்டும் தமிழ்ப் படங்களை இயக்க 15 ஆண்டுகளாகளாம், என்கிறார் பிரபு தேவா.
பிரபுதேவா இந்தியில் சல்மான்கானை வைத்து இயக்கிய 'வாண்டட்' படம் வெற்றி பெற்றது.
தொடர்ந்து அவருக்கு நிறைய வாய்ப்புகள் பாலிவுட்டில் வந்தவண்ணம் உள்ளது.
இப்போது அக்ஷய்குமார் நடிக்கும் 'ரவுடி ரத்தோர்' படத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகிறது. அடுத்து 'எனிபடி கேன் டான்ஸ்' என்ற படத்தையும் இயக்கி வருகிறார்.
மேலும் சல்மான்கான், அக்ஷய்குமார் ஆகியோருக்கு தலா ஒரு படங்கள் இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
பிரபுதேவாவுடன் படம் பண்ண ஷாரூக்கான் ஆர்வமாக உள்ளாராம்.
தொடர்ந்து பாலிவுட்டியலேயே வாய்ப்புகள் இருப்பதால் மும்பையிலேயே ஒரு வீடு வாங்கும் திட்டத்தில் உள்ளாராம் பிரபுதேவா.
இதுகுறித்து பிரபு தேவா கூறுகையில், "தமிழில் இப்போதைக்கு படம் செய்யும் சூழல் இல்லை. இந்தியில் ஏகப்பட்ட கமிட்மென்ட்கள் உள்ளன. அதையெல்லாம் முடித்துவிட்டு தமிழுக்கு நான் திரும்ப 15 ஆண்டுகள்கூட ஆகலாம்.
அதுவரை வாடகை வீட்டிலா தங்க முடியும். அதான் சொந்தமா மும்பையில் வீடு வாங்குகிறேன்," என்றார்.
நயன்தாராவுடனான பிரிவுதான் இந்த முடிவுக்குக் காரணமா என்று கேட்டதற்கு, "பேட்டியை முதல் கேள்வியோடு முடிச்சிக்கிட்டேனே," என்றார்.
0 comments: