கார்த்தி பிறந்த நாளான மே 25ம் திகதி, சகுனி படத்திற்கான இசையை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
நீண்ட மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டும் இன்னும் நிறைவடையாத சூழ்நிலையில் கார்த்தியின் சகுனி உள்ளது.
இப்படத்தில் ப்ரணீதா, சந்தானம், ராதிகா சரத்குமார், மும்தாஜ், சலீம் கோஸ் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.
புதுமுக இயக்குனர் சங்கர் தயாள் இயக்கி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
பெப்சி சங்கத்தினரின் ஸ்டிரைக் காரணமாக 'சகுனி' படப்பிடிப்பு தடைப்பட்டது. அதன் பிறகு, படத்தில் சலீம் கோஸின் நடிப்பு அவ்வளவு திருப்திகரமாக இல்லாததால், சலீம் கோஸ் காட்சிகளை நீக்கி விட்டு அவருக்கு பதில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்து மீண்டும் படப்பிடிப்பை நடத்தினார்கள்.
அனைத்து பணிகளும் முடிவுற்ற நிலையில் மே 11ம் திகதி இசை வெளியீடு நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.
தற்போது இசை வெளியீட்டு விழாவும் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
இது குறித்து படக்குழு, கார்த்தி பிறந்த நாளான மே 25ம் திகதி 'சகுனி' இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதனால் தான் இசை வெளியீடு தள்ளி வைத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.
எதிர் வரும் ஜுன் மாதம் இறுதியில் படத்தினை வெளியிட அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
0 comments: