சினிமா நட்சத்திரங்கள் சினேகா - பிரசன்னா திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது.
தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் சினேகா. புன்னகையரசி என்று எல்லோரும் வர்ணிக்கப்படும் சினேகா அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் சேர்ந்து நடித்தார்.
அப்போது அவர்களுக்குள் ஆரம்பமான நட்பு பின்னர் காதலாக மாறியது. ஆனால் இந்த காதலை இருவரும் வெளிகாட்டிக்கொள்ளாமல் ரகசியம் காத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த காதலை போட்டு உடைத்தார் நடிகர் பிரசன்னா. இவர்களது திருமணத்திற்கும் இருவரது வீட்டிலும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமணம் நிச்சயமானது.
அதன்படி நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தமும், வரவேற்பும் நடந்தது. முன்னதாக மணமகன் பிரசன்னா அலங்கரிக்கப்பட்ட தேரில் அழைத்து வரப்பட்டார். சினேகாவை ஒரு இளவரசி போல அலங்கரித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்ட பல்லக்கில் அமர வைத்து அழைத்து வந்தனர்.
பின்னர் இருவரும் மாலை மாற்றிக் கொண்டு மேடையில் நின்றனர். தொடர்ந்து இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அவர்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று(11.05.12) காலை இருவரது திருமணமும் சென்னை, வாணகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் நடந்தது. மணமகள் சினேகா கழுத்தில் பிரசன்னா தாலி கட்டி தனது மனைவியாக ஏற்றுக்கொண்டார். இந்த திருமணத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.
0 comments: