விஸ்வரூபம் திரைப்படத்தில் கமல் ஹாசனுக்கு ரூ.45 கோடி சம்பளம் தரப்பட்டதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் உட்பட முக்கிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது விஸ்வரூபம்.
இப்படத்தில் கமல் கதக் நடனக்கலைஞர், தலிபான் தீவிரவாதி என வெவ்வேறான வேடங்களில் நடித்துள்ளார்.
கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளார்கள். இதன் டிரையில் வெளியீடு சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஐஐஎப்ஏ விழாவில் வெளியிடப்பட்டது.
ஹாலிவுட் பிரமாண்டத்தை காட்டியுள்ள விஸ்வரூபம் டிரையிலர் விநியோகஸ்தர்களை கவர்ந்துள்ளது. எனவே விஸ்வரூபம் ரூ.120 கோடிக்கு விற்பனையாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் கமல் ஹாசன், விஸ்வரூபத்தில் நடிப்பதற்கு ரூ.45 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
விஸ்வரூபம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் திரைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: