• சகுனியால் தள்ளிப் போன பில்லா-2



    வரும் 22ஆம் திகதி வெளியாக இருந்த அஜீத் குமாரின் பில்லா 2 படத்தின் வெளியீட்டு திகதி ஜூன் மாதம் 29ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா நடித்துள்ள பில்லா 2 படம் வரும் 22ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.


    இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்த்தியின் சகுனியும் ஜூன் 22ஆம் திகதி வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த இரண்டில் எந்த படத்தின் திகதி மாற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

    தற்போது பில்லா 2 அறிவித்தபடி 22ஆம் திகதி வெளியாகாது என்றும், வெளியீட்டு திகதி ஜூன் மாதம் 29ஆம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பில்லா 2 பெரிய பட்ஜெட்டில் அஜீத் குமாரை வைத்து எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியானால் வியாபாரம் அடியாகும் என்று தயாரிப்பு வட்டம் கருதியுள்ளது. இதையடுத்து தான் பில்லா 2வின் வெளியீட்டு திகதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment