
ஹன்சிகாவுக்கு கோயில் கட்டுவதற்காக அவரது ரசிகர்கள் தீவிர வசூல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஹன்சிகா மோத்வானி.
இவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கின்றனர். குஷ்புக்கு ரசிகர்கள் கோயில் கட்டியது போல் ஹன்சிகாவுக்கும் கோயில்கட்ட முடிவு செய்துள்ளனர்.
மதுரை அடுத்துள்ள உசிலம்பட்டியில் உள்ள ரசிகர்கள் இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகின்றனர். இதற்காக நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் வசூல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
வரும் செப்டம்பர் மாதம் கோயில் கட்டும் பணி தொடங்குகின்றனர். 2013ம் ஆண்டு பொங்கல் தினத்தில் திறப்பு விழா நடக்கிறது. ஹன்சிகாவையே நேரில் அழைத்துச் சென்று கோயிலை திறக்க ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களுக்கு முன் என் ரசிகர்கள் சிலர் என்னை அணுகி எனக்கு கோயில் கட்ட உள்ளதாகவும் அதற்கு அனுமதி தரும்படியும் கேட்டனர். என் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துவதற்காகவே இப்படி செய்கிறார்கள் என்று எண்ணினேன்.
ஆனால் இது கொஞ்சம் ஓவர். கடவுளையும் மனிதனையும் சரிசமமாக பார்ப்பதை என்னால் ஏற்க முடியாது என்றார்.
0 comments: