• நான் இன்றைக்கு இப்படிக்கு இருக்க 'தல' தான் காரணம்: முருகதாஸ்



    நடிகர் அஜீத் குமார் தான் தனக்கு திரையுலக வாழ்க்கையைத் தந்தவர் என்று இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

    ஏ.ஆர். முருகதாஸ் கடந்த 2001ம் ஆண்டு தீனா படம் மூலம் இயக்குனரானார். அதைத் தொடர்ந்து அவர் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.
    கோலிவுட் தவிர பாலிவுட்டுக்கும் சென்று அங்கும் வெற்றி பெற்றுள்ளார். தெலுங்கிலும் ஒரு படம் எடுத்துள்ளார். பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் அவர் தான் கடந்து வந்த பாதை பற்றி கூறுகையில்,

    வட இந்திய மக்கள் என்னை ஒரு இயக்குனராக அதிலும் வெற்றிகரமான இயக்குனராக ஏற்க கஷ்டப்படுகிறார்கள். இப்பொழுதே இப்படி என்றால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் எப்படி இருந்தேன் என்பதை நினைத்து பாருங்களேன். ஆனால் அஜீத் எனக்கு 'நோ' சொல்லவில்லை. நான் கேட்டதும் ஒப்புக் கொண்டார். நாங்கள் அப்போது தீனா படத்தில் பணியாற்றினோம். இன்றைக்கு நான் எனது ஏழாவது படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவிருக்கிறேன். நான் இன்றைக்கு இந்த நிலையில் இருக்க அவர் தான் காரணம்.

0 comments:

Post a Comment