பாஸ் படத்தில் நடித்ததையடுத்து ஆர்யா, நயன்தாரா மீண்டும் புதிய படமொன்றில் இணைவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கொலிவுட்டில் ஆர்யா சேட்டை, இரண்டாம் உலகம் மற்றும் அஜித்துடன் இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கும் படம் ஆகியவற்றில் நடிக்கிறார்.
இந்நிலையில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் அட்லி இயக்கும் படத்தில் ஆர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தில் ஆர்யாவுடன் ஜோடியாக நடிக்க எந்த நடிகையும் 'ஓ.கே' சொல்லவில்லை.
இதற்கிடையில் நயன்தாராவை ஆர்யா உடன் இணைத்தால் பொருத்தமாக இருக்கும் என்றும் யோசித்துள்ளார்கள்.
ஏற்கனவே பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் மூலம் வெற்றி ஜோடியாக ஆர்யா-நயன்தாரா தயாரிப்பாளர்கள் மனதில் பதிந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரையும் இந்தப்படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள்.
ஆனால், நயன்தாரா கைவசம் படங்கள் இருப்பதால் தன் ஆருயிர் நண்பர் ஆர்யாவுடன் இந்தப்படத்தில் இணைந்து நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது என்று பட வட்டாரம் கூறுகிறது.
0 comments: